தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன் துறை ஆகிய பகுதிகள் இடையே அதிவேக பயணியர் படகு சேவை தொடங்கப் பட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது.
செரியபாணி எனப்படும் இந்தியக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான அதிவேக வாகனம் (HSC) இதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
நாகப்பட்டினம் ஆனது வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு அதி முக்கியத்துவம் சாராத துறைமுகமாகும்.