TNPSC Thervupettagam

இலவச அரிசி வழங்கீட்டுத் திட்டம் – தெலுங்கானா

January 8 , 2023 560 days 320 0
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழான மத்திய அரசின் இலவச அரிசி வழங்கீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
  • அம்மாநிலத்தில் உள்ள தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டைதாரர்களுக்கு, ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வீதம் ஐந்து கிலோ அரிசி வழங்குவதற்கு இந்த மத்திய அரசின் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஆனால் மாநில அரசு தனது சொந்தச் செலவில் கூடுதலாக 35.52 லட்சம் அட்டை தாரர்களுக்கும் இந்தத் திட்டத்தின் பயனை விரிவுபடுத்த உள்ளது.
  • இரண்டு வகையான திட்டங்களின் அட்டைதாரர்கள், டிசம்பர் 31 ஆம் தேதி வரை பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழான பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கீட்டுத் திட்டத்தின் பலனைப் பெற்று வந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்