பிப்ரவரி 27-ம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்காக இலவச மடிக்கணினித் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இக்கல்வியாண்டின் போது ஏறக்குறைய 15.18 லட்சம் மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கப்படுவர்.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனிற்காக இந்த வருடம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர்களிடமே மடிக்கணினி வழங்கும் கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது.
இவ்வருடம் முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுடன், 11-ம் வகுப்பு மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களும் இப்பலனைப் பெறுவர்.