TNPSC Thervupettagam

இளஞ்சிவப்பு சிறிய நட்சத்திரங்களிலிருந்து ஒளிக் கீற்றுகள்

October 26 , 2018 2222 days 706 0
  • ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் இளஞ்சிவப்பு சிறிய நட்சத்திரங்களிலிருந்து வரும் கடுமையான ஊதாக் கதிர்கள், தன்னைச் சுற்றி வரும் கிரகங்களின் வளிமண்டலங்களைப் பாதிப்படையச் செய்து அவற்றை வசிக்க இயலாததாக மாற்றிவிடும் எனக் கண்டறிந்துள்ளனர்.
  • ஹப்பிள் ஆனது ஹஸ்மத் (HAZMAT - Habitable Zones and M dwarf Activity across Time) என்ற ஒரு பெரிய திட்டத்தின் மூலம் இத்தகைய நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து வருகின்றது.
  • சிறிய சிவப்பு நட்சத்திரங்களுக்கான வானவியல் பெயர் எம்.ட்வார்ப் (M. Dwarf) என்பதாகும்.
  • குறைந்த நிறையுடைய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள கிரகங்களின் வசிப்பிடத் தன்மையை அறிந்து கொள்ள உதவுவதே ஹஸ்மத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • ஹஸ்மத் என்ற வார்த்தை சுற்றுப்புறத்திற்கும், உயிர்களுக்கும் ஆபத்தினை ஏற்படுத்தும் பொருட்கள் என்று விவரிக்கின்றது.
  • ஹஸ்மத் திட்டம் மூன்று வித்தியாசமான பருவங்களில் உள்ள இளைய, நடுத்தர மற்றும் வயதான சிறிய சிவப்பு நட்சத்திரங்களின் மீதான புறஊதாக் கதிர்கள் மீதான ஆய்வுத் திட்டமாகும்.
  • இளஞ்சிவப்பு சிறிய நட்சத்திரம் (ட்வார்ப்/Dwarf) நமது அண்டத்தில் மிகச் சிறிய அளவில் நீண்ட வாழ்வைக் கொண்டு மிகுதியாக உள்ள ஒரு வகையான நட்சத்திரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்