TNPSC Thervupettagam

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உலக மாநாடு

June 20 , 2022 764 days 372 0
  • பருவநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணும் வகையில், எகிப்தில் உள்ள ஷர்ம் எல் ஷேக் என்னுமிடத்தில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எட்டாவது உலக மாநாடு தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த இரண்டு நாட்கள் அளவிலான மாநாட்டினைப் பிரதிநிதிகள் சபை மற்றும் நாடுகளுக்கு இடையிலானப் பாராளுமன்ற ஒன்றியம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
  • மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாகாலாந்தின் முதல் நாடாளுமன்ற பெண் உறுப்பினரான S.பாங்கோன் கொன்யாக் இந்த மாநாட்டில் இந்திய நாட்டின் சார்பாகப் பங்கேற்கிறார்.
  • இந்த மாநாட்டில் ‘பருவநிலை நடவடிக்கைகளுக்கான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்’ குறித்து அவர் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்