TNPSC Thervupettagam

இளைஞர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2022

August 14 , 2022 835 days 434 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான இளைஞர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் என்ற ஒரு அறிக்கையானது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பினால் வெளியிடப் பட்டது.
  • 15 மற்றும் 24 வயதுக்குட்பட்டவர்கள் எதிர்கொள்ளும் ஏராளமான தொழிலாளர் சந்தை சார்ந்த சவால்களைப் பெருந்தொற்று மோசமாக்கியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வயது வந்தோர் பிரிவினரை விட இந்த வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பில் அதிக சதவீத இழப்பைச் சந்தித்து உள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 73 மில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில், 2020 ஆம் ஆண்டின் மதிப்புடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் 0.9 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது.
  • ஆனால் அதே காலகட்டத்தில் வயது வந்தோர் பிரிவினரின் பங்கேற்பு வீதம் 2 சதவீதப் புள்ளிகள் அதிகரித்தது.
  • இந்தியாவில் 18 மாதங்கள்வரையில்  பள்ளி மூடல்கள் நீடித்தன.
  • பள்ளி செல்லும் 24 கோடி குழந்தைகளில், கிராமப்புறங்களில் உள்ள 8% மற்றும் நகர்ப் புறங்களில் உள்ள 23% குழந்தைகள் மட்டுமே இணையவழிக் கல்வி முறைக்குப் போதுமான அணுகல் வசதியைப் பெற்றிருந்தனர்.
  • இந்தியாவில், சராசரியாக 92% குழந்தைகள் மொழியில் குறைந்தபட்சம் ஒரு அடிப்படைத் திறனையும், 82% குழந்தைகள் கணிதத்தில் குறைந்தபட்சம் ஒரு அடிப்படைத் திறனையும் இழந்துள்ளனர்.
  • இந்தியாவில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இளம் பெண் தொழிலாளர் சந்தைப் பங்கேற்பு வீதம் உள்ளது.
  • மேலும், இந்திய இளம் பெண்கள் 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இளம் ஆண்களை விட பெரிய அளவிலான வேலைவாய்ப்பு இழப்பைச் சந்தித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்