மூத்த இசையமைப்பாளர் இளையராஜா "வேலியண்ட்" எனப்படுகின்ற தனது "முதல் மேற்கத்தியப் பாரம்பரிய சிம்பொனி / இசைத் தொகுப்பினை" இலண்டன் நகரில் வெளியிட்டார்.
இலண்டனில் இந்தச் சாதனையைப் படைத்த ஆசியத் திரைத்துறையினைச் சேர்ந்த முதல் இசைக்கலைஞர் இவரே ஆவார்.
இளையராஜா ஸ்காட்லாந்து நாட்டு தேசிய இசைக்குழுவுடன் இணைந்து வேலியண்ட் இசைத் தொகுப்பினை பதிவு செய்துள்ளார்.
மேற்கத்தியப் பாரம்பரிய இசையின் பல கூறுகளை திரைப்பட இசைக்காக வேண்டி பயன்படுத்திய முதல் இந்திய இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் ஆவார் என்ற நிலையோடு அதே போல் முழு நீள அளவில் சிம்பொனியை இயற்றிய முதல் இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர் ஆவார்.