உள்ளடக்கக் கருத்து உருவாக்குபவரும் நடிகையுமான பிரஜக்தா கோலி இந்தியாவின் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பின் (UNDP - UN Development Programme) இளையோர் பருவநிலை சாம்பியன் ஆனார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பின் உடனான தனது கூட்டாண்மையின் கீழ் இவர் இந்தப் பட்டத்தை வென்றார்.
பல்வேறு உலகளாவிய சமூகப் பிரச்சாரங்கள் மூலம் மனநலம், பெண் குழந்தை கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் ஆகியவற்றில் அவர் ஆற்றியப் பங்களிப்பின் காரணமாக இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
இந்திய யூடியூபர் மற்றும் நடிகையான இவர், தனது வெகு பிரபல யூடியூப் சேனலான "மோஸ்ட்லிசேன்" (Mostlysane) என்பதின் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார்.