TNPSC Thervupettagam

இளையோர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2024

August 25 , 2024 90 days 136 0
  • உலகளாவிய இளையோர்களின் வேலைவாய்ப்பின்மை ஆனது, 15 ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது என்பதோடு அது தொடர்ந்து வீழ்ச்சியடையும்  வாய்ப்பும் உள்ளது.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் இந்த அறிக்கையானது, "இளையோருக்கான உலகளாவிய வேலை வாய்ப்புப் போக்குகள் 2024 (இளையோருக்கான GET) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு உலகளவில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 64.9 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருந்தனர்.
  • 2023 ஆம் ஆண்டில் கிழக்கு ஆசியாவில் இருந்த இளையோர்களின் வேலை வாய்ப்பின்மை விகிதமான 14.5 சதவிகிதம் என்பது வரலாறு காணாத வகையிலான அதிகளவாகும்.
  • தெற்காசியாவில் 2023 ஆம் ஆண்டில், இப்பகுதியில் உள்ள ஐந்தில் ஒரு இளைஞர் (20.4%) ‘வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் இல்லாத’ நிலையில் இருந்தனர்.
  • 2025 ஆம் ஆண்டில், இப்பகுதியில் இளையோர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 13.7% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இளையோர்களின் வேலை வாய்ப்பின்மை விகிதம் ஆனது 2019 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 2023 ஆம் ஆண்டில் அதிகமாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியிலான வேலை வாய்ப்பின்மை விகிதம் கிட்டத்தட்ட சமமாக இருந்தது (இளம் பெண்கள் மத்தியில் 12.9 சதவீதம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் 13 சதவீதம்).
  • அதிக வருமானம் கொண்ட சில நாடுகளில் பாதுகாப்பான ஊதியம் பெறும் வேலை வாய்ப்பில் பணி புரியும் இளைஞர்களின் பங்கு கணிசமாக அதிகமாக உள்ளது (2023 ஆம் ஆண்டில் 76%).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்