தமிழ்நாடு மாநில திட்ட ஆணையமானது (SPC) தமிழ்நாடு வேலைவாய்ப்புக் கொள்கை வரைவினை உருவாக்கியுள்ளது.
இது தற்போதைய தொழிலாளர் சந்தையில் - படித்த இளையோர்களிடையே நிலவும் அதிக வேலைவாய்ப்பின்மை விகிதங்கள் முதல் திறன்கள் மற்றும் நோக்கங்களுக்கு இடையிலான பொருத்தமின்மை மற்றும் வேலை வாய்ப்புகள் வரையிலான பல முக்கியமானப் பிரச்சினைகளை எடுத்துக் காட்டியுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் 34.11 மில்லியனாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த தொழிலாளர் தேவை 2031-32 ஆம் ஆண்டில் 36.5 மில்லியனாக- 2.3 மில்லியன் நிகர அதிகரிப்புடன் இருக்கும்.
முந்தைய பத்து ஆண்டுகளில் (2011-12 முதல் 2021-22 வரை) வேலைவாய்ப்பில் பதிவான நிகர அதிகரிப்பு 2.12 மில்லியனாக இருந்தது.
2021-22 ஆம் ஆண்டில் பணியில் உள்ள இளையோர்களின் விகிதம் (20-29 வயது உடையவர்கள்) 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது – இது 2004-05 ஆம் ஆண்டில் இருந்த அளவினை விட 15 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு என்று அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.
இது தற்போது வெறும் சுமார் 5.9% ஆக உள்ள வேளாண் துறையில் பணிபுரியும் இளையோர்களின் விகிதாச்சாரத்தில் பதிவான கடுமையானச் சரிவின் காரணமாக ஏற்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் இளம் பெண்களின் (20-29 வயது) வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.4% ஆக அதிகரித்துள்ளது.