TNPSC Thervupettagam

இழப்பு மற்றும் சேத நிதி உள்ளடக்கம்

November 16 , 2022 613 days 283 0
  • இழப்பு மற்றும் சேத நிதியானது COP27 மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வச் செயல்பாட்டு நிரலின் ஒரு பகுதியாக மாறியது.
  • COP27 மாநாடானது எகிப்தில் உள்ள ஷர்ம்-எல்-ஷேக் என்னுமிடத்தில் நடைபெறுகிறது.
  • இந்தச் செயல்பாட்டு நிரலில் "குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுடன் தொடர்புடைய விஷயங்கள்" மற்றும் "நீண்ட கால நிதி" ஆகியவை அடங்கும்.
  • இழப்பு மற்றும் சேத நிதி என்பது பருவநிலை மாற்றத்தினால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள பகுதிகள் மற்றும் சமூகங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு செயல்முறையாகும்.
  • இந்தச் செயல்முறையானது, இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் மற்றும் பாதிக்கப் படக் கூடிய சமூகங்களால் நீண்ட காலத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரப் பட்டு வருகிறது.
  • இருப்பினும், பெரும்பான்மையான நிதியை வழங்க வேண்டும் என்ற ஒரு நிலைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக வளர்ச்சி பெற்ற நாடுகள் இதை எதிர்த்தன.
  • சமீபத்தில், வளர்ச்சி பெற்ற நாடுகள், பல காலமாக வெளியிடப்பட்டு வரும் உமிழ்வுகளுக்குப் பொறுப்பேற்காத வகையில், 'இழப்பீடு மற்றும் பொறுப்பு' சார்ந்த இலக்கை உள்ளடக்காத வகையிலான நெறிமுறையினை இந்த செயல்பாட்டு நிரலில் சேர்ப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
  • இந்த நெறிமுறை நடைமுறைக்கு வந்தால், சுந்தரவனக் காடுகள் உட்பட தாழ் மட்டத்தில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் கூடிய கடலோரப் பகுதிகளை இது பெரும் அளவில் நேர்மறையாக பாதிக்கும்.
  • இந்தியப் பிரதமர் அவர்களால் முன்மொழியப்பட்ட சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Life) என்ற திட்டமும் இந்தச் செயல்பாட்டு நிரலின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்