TNPSC Thervupettagam

இஸ்ரேலின் ஹைஃபா விடுதலைக்கான நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள்

September 24 , 2018 2259 days 694 0
  • 1918 ஆம் ஆண்டு இந்தியப் படைகளால் இஸ்ரேலின் ஹைஃபா (Haifa) பகுதி விடுவிக்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழாவை இந்தியா கொண்டாடி வருகின்றது.
  • ஹைஃபா யுத்தம் இஸ்ரேலிலும் ஜெய்ப்பூரிலும் நினைவு கூறப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் டெல்லியில் ஒரு பெரிய விழாவோடு முடிவடைய இருக்கின்றது.
  • மைசூர், ஹைதராபாத் மற்றும் ஜோத்பூர் ஆகிய 3 இந்தியக் குதிரைப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய ராணுவத்தால் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 23-ம் தேதி ஹைஃபா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • 1918-ம் ஆண்டு ஹைஃபா யுத்தத்தில் அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 15வது இம்பீரியல் குதிரைப்படையின் குதிரைப்படை தாக்குதல் நடவடிக்கை மூலம் மேற்சொன்ன 3 இந்தியக் குதிரைப்படைகள் ஹைஃபா பகுதியை விடுதலை செய்ய உதவின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்