1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் உள்ள கடமைகளை இஸ்ரேல் மீறுவதாக அறிவிக்கும் வகையிலான ஒரு அவசர உத்தரவினை விடுக்குமாறு சர்வதேச நீதிமன்றத்தை (ICJ) தென்னாப்பிரிக்கா நாடியது.
ICJ என்பது உலக நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் தளமாகும்.
‘இனப்படுகொலை’ என்ற சொல் ஆனது, இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை விதித்தல் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் 1948 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுருக்களைப் பயன்படுத்தி வரையறுக்கப் பட்டுள்ளது.
தற்போதைய உடன்படிக்கையில், இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன, பிரிவு அல்லது சமயக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் ஒரு நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பின்வரும் சில செயல்களில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கிறது:
ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது;
ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த பாதிப்பை ஏற்படுத்துதல்;
ஒரு குழுவை முழுமையான அல்லது பகுதியளவிலான நேரடி அழிவைக் கொண்டு வருவதற்காக உணர்வுடன் அக்குழுவின் உறுப்பினர்களை துன்புறுத்துதல்;
குழுவிற்குள் புதியக் குழந்தை பிறப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;
குழுவினைச் சேர்ந்த குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறு குழுவிற்கு மாற்றச் செய்தல்.
2019 ஆம் ஆண்டில், காம்பியா நாடானது, இஸ்லாமியக் கூட்டாண்மை அமைப்பின் சார்பாக, மியான்மர் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.