நிலவிற்கான தனது முதலாவது திட்டத்தை மேற்கொண்ட இஸ்ரேல் விண்வெளிக் கலமானது தனது முதலாவது சுய புகைப்படத்தை புவிக்கு அனுப்பியுள்ளது.
இந்தப் படமானது பின்புறத்தில் புவியுடன் பெரிஷீட் (ஹீப்ரூ மொழியில் தொடக்கத்திற்கான பொருள்) விண்வெளிக் கலத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது.
அரசு சாரா நிறுவனமான SpaceIL மற்றும் அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் விண்வெளித் தொழிற்சாலை ஆகிய இரண்டும் இணைந்து புளோரிடாவின் கேப் கனவேரிலிலிருந்து ஆளில்லா பெரிஷீட் என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 3,84,000 கிலோ மீட்டர் பயணித்து நிலவில் கால் பதித்துள்ளன.