இஸ்ரேல் நாடாளுமன்றமானது சர்ச்சைக்குரியச் சட்டப்பூர்வ முடிவிற்கான சரிபார்ப்பு சோதனை முறை மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
நீதித்துறையைப் பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியில் இது முதலாவது நடவடிக்கையாகும்.
அரசின் முடிவுகளை சட்டப் பூர்வமற்றதாக அறிவிக்கச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தினை இந்த மசோதா பறிக்கிறது.
தலைமை வழக்குரைஞரின் தலைமையின் கீழ், தங்கள் சட்ட ஆலோசகர்களிடமிருந்து பெறும் ஆலோசனைக்கு அமைச்சர்கள் கீழ்ப்படிய வேண்டிய ஒரு அவசியத்தை இந்த மசோதா நீக்குகிறது.