TNPSC Thervupettagam

இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரக அமைதி ஒப்பந்தம்

August 21 , 2020 1466 days 653 0
  • இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதலாவது வளைகுடா  நாடு ஐக்கிய அரபு அமீரகமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது ஆப்ரஹாம் பிரகடனம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூன்றாவது அரபு நாடு இஸ்ரேல் ஆகும்.
  • யூதம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய  3 முக்கியமான ஆப்ரஹாமிக் சமயங்களை கௌரவப்படுத்துவதற்காக ஆப்ரஹாம் என்ற பெயரானது பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்த ஒப்பந்தமானது மேற்கு நதிக் கரையின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுத்து  நிறுத்தியுள்ளது.

மேற்கு நதிக்கரைப் பிரச்சினை

  • மேற்கு நதிக்கரைப் பகுதியானது இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகியவற்றிற்கு இடையே அமைந்துள்ளது.
  • மேற்கு நதிக்கரைப் பகுதியானது அரபு-இஸ்ரேலியப் போரின் முடிவில் ஜோர்டான் நாட்டினால் கைப்பற்றப்பட்டது.
  • 1967 ஆம் ஆண்டில், சிரியா, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகியவற்றின் கூட்டுப் படையினால் இஸ்ரேல் தோற்கடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்