TNPSC Thervupettagam
January 11 , 2018 2511 days 890 0
  • தமிழகத்தைச் சேர்ந்த சிவன் என்ற ராக்கெட் விஞ்ஞானியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராகவும், இந்திய விண்வெளி துறையின் அடுத்த செயலாளராகவும் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு (Appointments Committee of the Cabinet) நியமித்துள்ளது.
  • தற்போது இஸ்ரோவின் தலைவராக உள்ள கிரண் குமாரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் இஸ்ரோவின் 9 ஆவது தலைவராக சிவன் மூன்று ஆண்டு பதவிகாலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நடப்பில், திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள சிவன், இந்தியாவின் உரை வெப்பநிலை (Cryogenic) எஞ்சின் தயாரிப்பில் பெரும் பங்காற்றிய முக்கிய இராக்கெட் நிபுணராவார்.
  • உள்நாட்டுத் தொழில்நுட்பமுடைய GSLV MK II எனப்படும் புவியிணக்க செயற்கைக்கோள் ஏவு அமைப்பு (Geosynchronous Satellite Launch Vehicle) MK II ரக ஏவு வாகனத்தின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய இவர், மறுபயன்பாட்டு ஏவு அமைப்பான (reusable launch vehicle) சுவதேசி விண்வெளி விண்கலத்தினை (Swadeshi space shuttle) உருவாக்குவதற்கு ஆலோசனை வழங்கிய குழுவின் முக்கிய உறுப்பினருமாவார்.
  • கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரே இராக்கெட் ஏவலில் 104 செயற்கைக்கோள்களை வேறுபட்ட சுற்றுப் பாதையில் செலுத்தி உலக சாதனை புரிந்த இஸ்ரோவின் வெற்றிக்கு சிவன் அவர்களின் நிபுணத்துவமும் ஓர் முக்கியக் காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்