கட்டமைப்புகளின் வரையறுக்கப்பட்ட ஒரு கூறு பகுப்பாய்வு (FEAST) மென்பொருளின் சமீபத்தியப் பதிப்பை ISRO வெளியிட்டது.
FEAST மென்பொருள் என்பது விண்வெளி, வாகனம், கட்டிடவியல், இயந்திர மற்றும் கடல் சார் பொறியியல் துறைகளில் மிகவும் அதிகளவு சுமைகளைத் தாங்கும் கட்டமைப்புகளின் இயக்கத்தினைப் பகுப்பாய்வு செய்வதற்காக பயன்படுத்தப் படும் வரையறுக்கப்பட்ட கூறு பகுப்பாய்வு முறையை மிகவும் அடிப்படையாகக் கொண்ட வகையிலான ஒரு கட்டமைப்பு பகுப்பாய்வு மென்பொருளாகும்.
இது நேரடியாக கட்டுமானப் பணிகளை மேற்கோள்வதற்கு முன்னதாக அவற்றின் வடிவமைப்புகளை வடிவமைப்புச் செயல்முறையிலேயே பொறியாளர்கள் சோதிக்க வழி வகுக்கிறது.