இஸ்ரோவின் PSLV-C58 ஆனது ஊடுகதிர் முனைவாக்க செயற்கைக் கோளை (XPoSat), கிழக்கு நோக்கிய தாழ்மாட்ட சாய்வு சுற்றுப்பாதையில் சமீபத்தில் செலுத்தியது.
XPoSat என்பது இஸ்ரோவின் முதல் பிரத்தியேக அறிவியல் செயற்கைக்கோள் ஆகும்.
இது வானியல் மூல அமைப்புகளிலிருந்து வெளிவரும் ஊடுகதிர் வெளியீட்டின் விண்வெளி அடிப்படையிலான முனைவாக்க அளவீடுகள் குறித்த ஆராய்ச்சியை மேற் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது POLIX (ஊடு கதிர்களில் உள்ள முனைவாக்க கருவி) மற்றும் XSPECT (ஊடு கதிர் நிறமாலைமானி மற்றும் நேர மதிப்பீடு) ஆகிய இரண்டு ஆய்வுக் கருவிகளைக் கொண்டுள்ளது.
புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இஸ்ரோ மையங்களால் உருவாக்கப்பட்ட 10 விண்கலங்களையும் PSLV விண்ணில் செலுத்தியது.