TNPSC Thervupettagam
January 2 , 2024 328 days 301 0
  • இஸ்ரோவின் PSLV-C58 ஆனது ஊடுகதிர் முனைவாக்க செயற்கைக் கோளை (XPoSat), கிழக்கு நோக்கிய தாழ்மாட்ட சாய்வு சுற்றுப்பாதையில் சமீபத்தில் செலுத்தியது.
  • XPoSat என்பது இஸ்ரோவின் முதல் பிரத்தியேக அறிவியல் செயற்கைக்கோள் ஆகும்.
  • இது வானியல் மூல அமைப்புகளிலிருந்து வெளிவரும் ஊடுகதிர் வெளியீட்டின் விண்வெளி அடிப்படையிலான முனைவாக்க அளவீடுகள் குறித்த ஆராய்ச்சியை மேற் கொள்வதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது POLIX (ஊடு கதிர்களில் உள்ள முனைவாக்க கருவி) மற்றும் XSPECT (ஊடு கதிர் நிறமாலைமானி மற்றும் நேர மதிப்பீடு) ஆகிய இரண்டு ஆய்வுக் கருவிகளைக் கொண்டுள்ளது.
  • புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இஸ்ரோ மையங்களால் உருவாக்கப்பட்ட 10 விண்கலங்களையும் PSLV விண்ணில் செலுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்