மார்க் III - LVM3-M2 என்ற இந்தியாவின் அதிக எடை கொண்ட ஏவுகலமானது ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த வாடிக்கையாளரின் 36 அகலப்பட்டை வரிசை சேவைக்கான செயற்கைக் கோள்களை அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் செலுத்தியது.
8,000 கிலோ வரையிலான எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறனைக் கொண்டதனால் இந்த வாகனம் மிகவும் கனமான ஏவுகலம் என்றும் அழைக்கப் படுகிறது.
5,796 கிலோ எடை கொண்ட முதல் இந்திய ஏவுகலம் இதுவாகும்.
LVM3-M2 என்பது மூன்று-நிலை ஏவு வாகனம் என்பதோடு அதன் பக்கவாட்டுப் பகுதிகளில் இரண்டு திட உந்துசக்தி S200 மோட்டார்கள் உள்ளன.
இது மைய நிலை L110 திரவ நிலை மற்றும் C25 கிரையோஜெனிக் நிலை ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஆறு டன் விண்வெளி பொருட்களை ஏற்றிச் சென்ற முதல் இந்திய ராக்கெட் இது என்பதோடு அதன் முதல் வணிக ஏவுதலை NSIL நிறுவனம் மேற்கொண்டது.
மேலும், இது LVM3 வாகனத்தின் முதல் தாழ்மட்டச் சுற்றுப்பாதை வரையிலான முதல் பல-செயற்கைக் கோள் ஆய்வுப் பணி மற்றும் NSIL/DoS உடனான முதல் OneWeb ஆய்வுப் பணியாகும்.