TNPSC Thervupettagam

இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ஏவுகலம்

October 26 , 2022 764 days 417 0
  • மார்க் III - LVM3-M2 என்ற இந்தியாவின் அதிக எடை கொண்ட ஏவுகலமானது  ஐக்கியப் பேரரசினைச்  சேர்ந்த வாடிக்கையாளரின் 36 அகலப்பட்டை வரிசை சேவைக்கான செயற்கைக் கோள்களை அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் செலுத்தியது.
  • 8,000 கிலோ வரையிலான எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறனைக் கொண்டதனால் இந்த வாகனம் மிகவும் கனமான ஏவுகலம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • 5,796 கிலோ எடை கொண்ட முதல் இந்திய ஏவுகலம் இதுவாகும்.
  • LVM3-M2 என்பது மூன்று-நிலை ஏவு வாகனம் என்பதோடு அதன் பக்கவாட்டுப் பகுதிகளில் இரண்டு திட உந்துசக்தி S200 மோட்டார்கள் உள்ளன.
  • இது மைய நிலை L110 திரவ நிலை மற்றும் C25 கிரையோஜெனிக் நிலை ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • ஆறு டன் விண்வெளி பொருட்களை ஏற்றிச் சென்ற முதல் இந்திய ராக்கெட் இது என்பதோடு அதன் முதல் வணிக ஏவுதலை NSIL நிறுவனம் மேற்கொண்டது.
  • மேலும், இது LVM3 வாகனத்தின் முதல் தாழ்மட்டச் சுற்றுப்பாதை வரையிலான முதல் பல-செயற்கைக் கோள் ஆய்வுப் பணி மற்றும் NSIL/DoS உடனான முதல் OneWeb ஆய்வுப் பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்