TNPSC Thervupettagam

இஸ்ரோவின் ரைசாட் – 3BRI

May 6 , 2019 2031 days 707 0
  • இஸ்ரோவானது அதன் ரேடார் வரைபட செயற்கைக் கோளான ரைசாட் - 2BRI ஐ ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தவுள்ளது.
  • இந்த ஏவுதலானது ரைசாட் - 2A க்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் செலுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது முன்கூட்டியே செலுத்தப்படவுள்ளது.
  • தொலையுணர் செயற்கைக் கோளான ரைசாட் ஆனது சிந்தெடிக் அபெர்ச்சர் ரேடாரைப் பயன்படுத்தி அனைத்து காலநிலைகளிலும் கண்காணிப்பை வழங்குகின்றது.
  • ரைசாட் செயற்கைக் கோள்களானது இஸ்ரோவின் அனைத்து காலநிலையிலும் கண்காணிக்கும் தன்மையுடைய முதலாவது செயற்கைக் கோள்களாகும்.
  • இவை பாதுகாப்புப் படைகளுக்கு எல்லைப் பகுதி ஊடுருவல்களை கண்டறிய இரவு மற்றும் பகல் நேரங்களில் பூமியின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • இந்தச் செயற்கைக் கோளானது இஸ்ரோவுக்குச் சொந்தமான துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகனமான PSCLV-C46-ன் மூலம் செலுத்தப்படவுள்ளது.
  • மேலும் இஸ்ரோவானது அதன் நிலப்படவியல் செயற்கைக்கோளான கார்டோசாட் – 3 யை மற்ற சிறிய பாதுகாப்பு செயற்கைக் கோள்களுடன் சேர்த்து செலுத்த திட்டமிட்டுள்ளது.
ரைசாட் செயற்கைக் கோள்கள்
  • ரைசாட் ஆனது இஸ்ரோவால் செலுத்தப்பட உள்ள அனைத்து காலநிலைகளிலும் பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக் கோள் வகையின் முதல் வரிசை ஆகும்.
  • இந்த ரேடார் வரைபட செயற்கைக் கோள்களானது சிந்தெடிக் அபெர்ச்சர் ரேடாரைப் பயன்படுத்தி அனைத்து காலநிலைகளிலும் பூமியைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் ரைசாட் - 2 ஆனது ரைசாட் - 1க்கு முன்னதாகவே சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
  • ரைசாட்-1 ஆனது PSLV-C19 மூலம் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று 5 ஆண்டு கால செயல்பாட்டிற்காக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இது இஸ்ரோ மூலம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் உள்நாட்டு மைக்ரோவேவ் தொலையுணர் செயற்கைக் கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்