காஸா பகுதியில் (Gaza Strip) பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அண்மைய வன்முறையினைப் பற்றி விவாதிப்பதற்காக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் 57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு (Organization of Islamic Cooperation -OIC) அண்மையில் நடைபெற்றது.
துருக்கி அதிபர் ரிசெப் தய்யீம் எர்போகனின் அழைப்பினைத் தொடர்ந்து இம்மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் இஸ்ரேலிய படையினால் மேற்கொள்ளப்பட்ட அமைதிவழியிலான பாலஸ்தீனிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் படுகொலைக்கு (massacre) கண்டனம் தெரிவிக்கப்பட்டது.