TNPSC Thervupettagam

இஸ்லாமியத்திற்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுதல் நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி

February 7 , 2023 531 days 231 0
  • இஸ்லாமியத்திற்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுதல் என்ற நடவடிக்கைகளுக்கான தனது முதல் சிறப்புப் பிரதிநிதியை கனடா அரசு நியமித்து உள்ளது.
  • நாட்டில் முஸ்லிம்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தப் பதவியானது உருவாக்கப் பட்டது.
  • இதில் பத்திரிகையாளரும் ஆர்வலருமான அமிரா எல்கவாபி சாம்பியன், ஆலோசகர், நிபுணர் மற்றும் பிரதிநிதி என்ற பல பரிமாணங்களில் பணியாற்ற உள்ளார்.
  • இஸ்லாமியத்திற்கு எதிரான பாகுபாடுகள், அமைப்பு ரீதியிலான இனவாதம், இன பாகுபாடு மற்றும் மத சகிப்புத் தன்மையற்றல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் அந்நாட்டு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அவர் ஆதரவளித்து அதனை மேம்படுத்துவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்