ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் 40-வது ஆண்டு தினக் கொண்டாட்டங்களை நிறைவு செய்திருக்கின்றது.
1979 புரட்சி அல்லது இஸ்லாமியப் புரட்சி ஈரானின் மன்னரான முகமது ரெசா ஷா பஹல்வி என்பவரின் மன்னராட்சியைத் தூக்கி எறிந்தது.
அவரது அரசாங்கம், புரட்சியில் பங்கு பெற்ற ஒரு பிரிவின் தலைவரான அயதுல்லா ருஹல்லா கோஹ்மேய்னி என்பவரது தலைமையின் கீழ் ஒரு இஸ்லாமியக் குடியரசாக நிறுவப்பட்டது.
அமெரிக்க அரசால் ஆதரவளிக்கப்பட்ட இந்த மன்னராட்சிக்கு எதிரான புரட்சியானது பலதரப்பட்ட இடதுசாரி இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளால் ஆதரவளிக்கப்பட்டது.