இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம் - மார்ச் 15
March 20 , 2023 620 days 232 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மார்ச் 15 ஆம் தேதியினை இஸ்லாமோ ஃபோபியாவை (இஸ்லாமியத்திற்கு எதிரான மனப்பாங்கினை) எதிர்த்துப் போராடச் செய்வதற்கான சர்வதேச தினமாக அறிவிப்பதற்கான ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) சார்பில் பாகிஸ்தான் இந்தத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது.
இஸ்லாமியத்திற்கு எதிரான மனப்பாங்கு என்பது தூண்டுதல், விரோதம் மற்றும் சகிப்பின்மைக்கு வழி வகுக்கின்ற முஸ்லிம்கள் மீதான பயம், பாரபட்சம் மற்றும் வெறுப்பு ஆகியவையாகும்.