குடும்ப சுகாதாரம் சார்ந்த துறையில் மிகச்சிறந்த சேவையாற்றியமைக்காக உலக சுகாதார நிறுவனத்தின் கௌரவமிக்க பரிசான இஹ்சான் டோக்ராமாசி குடும்ப சுகாதார பவுண்டேஷன் பரிசிற்கு (Ihsan Dogramaci Family Health Foundation Prize) நிதி ஆயோக் உறுப்பினரான வினோத் பவுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவ்விருதைப் பெற உள்ள முதல் இந்தியர் இவரேயாவார்.
ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார மையத்தின் தலைமையகத்தில் வருகின்ற மே மாதத்தில் இப்பரிசு இவருக்கு வழங்கப்பட உள்ளது.
உலகளவில், குறிப்பாக வளரும் நாடுகளின் சமூகங்களில் அமைந்துள்ள குடும்பங்களினுடைய நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக வேண்டி இவர் ஆற்றிய தனித்துவமிக்க பங்களிப்பின் காரணமாக உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக வாரியத்தால் வினோத் பவுல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பரிசைப் பற்றி
குடும்ப சுகாதார களத்தில் மேற்கொள்ளப்படும் தனித்துவ சேவைகளுக்கு அங்கீகாரமளிப்பதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் வழங்கப்படும் ஓர் உலகளாவிய கௌரவமே இஹ்சான் டோக்ராமாசி குடும்ப சுகாதார பவுண்டேஷன் பரிசாகும்.
இவ்விருதானது 1980-ஆம் ஆண்டு, இஹ்சான் டோக்ராமாசி எனும் குழந்தை நல மருத்துவரால் நிறுவப்பட்டது.