TNPSC Thervupettagam

ஈரநிலங்களின் புதிய மதிப்பீடு

November 4 , 2024 18 days 93 0
  • 35 பெர்சன்ட் (சர்வதேச ஈரநிலங்கள் அமைப்பின் மூலம் நியமிக்கப்பட்ட) என்ற ஒரு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீடு ஆனது, 15வது பங்குதாரர்கள் மாநாட்டிற்குப் பிறகு (COP15) சமர்ப்பிக்கப்பட்ட NBSAP என்ற திட்டத்தில் ஈரநிலங்களின் பங்கை எடுத்துக் காட்டுகிறது.
  • குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர்ப்பெருக்க கட்டமைப்பிற்கு (KMGBF) நன்கு இணங்க உறுப்பினர் நாடுகள் தங்கள் NBSAP திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளன.
  • KMGBF ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் பல்லுயிர்ப் பெருக்க இழப்பை நிறுத்தவும் அதனை மீட்டெடுப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மதிப்பீட்டில் உலகெங்கிலும் உள்ள 24 NBSAP திட்டங்கள் அடங்கும் என்பதோடு இது பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான உடன்படிக்கையின் உறுப்பினர்களாக உள்ள 196 நாடுகளில் 12 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
  • பெரும்பாலான மறுபரிசீலனைச் சமர்ப்பிப்புகள் ஆனது ஐரோப்பாவிலிருந்தும் (10), அதைத் தொடர்ந்து ஆசியா (7), ஆப்பிரிக்கா (2), வட அமெரிக்கா (2), இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (2) மற்றும் ஓசியானியா (1) ஆகியவற்றிலிருந்தும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்