ஈரநில புனர்வாழ்வு தொடர்பான அதன் தேசிய முன்னெடுப்பின் கீழ், மத்திய அரசு புனர்வாழ்விற்காக இந்தியா முழுவதும் 100 ஈரநிலங்களை அடையாளம் கண்டுள்ளது.
பள்ளிக்கரணை, கோடியக்கரை, புலிகாட் மற்றும் கூந்தன்குளம் ஆகியவை தமிழ்நாட்டிலிருந்து இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஈரநிலங்கள் ஆகும்.
“ஈரநிலங்களின் நண்பர்கள்” அல்லது பக்சி மித்ராஸ் என்ற குழுவை உருவாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் பங்குதாரர்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள். இந்த ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக அவர்கள் பங்கேற்பார்கள்.
தமிழ்நாட்டில், 1991 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் உள்ள SACON இன் ஆய்வின்படி, 1,175 ஈரநிலங்கள் உள்ளன. இது மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 1.24 சதவிகிதப் பரப்பைக் கொண்டுள்ளன.