TNPSC Thervupettagam

ஈராக்கின் ஜாக்ரோஸ் மலைகள்

February 26 , 2025 6 days 59 0
  • ஈராக்கின் வடக்கில் அமைந்துள்ள ஜாக்ரோஸ் மலைகளைச் சுற்றியுள்ள பகுதியானது புவியின் மேலாடுக்கில் உள்ளிறங்கி வருகிறது.
  • பூமியின் மேற்பரப்பிற்குக் உள்ளிறங்கி வரும் கடல்சார் "தட்டு" ஆனது ஈராக்கின் வடக்குப் பகுதியைக் கீழ்நோக்கி நன்கு இழுப்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • அரேபிய மற்றும் யூரேசிய கண்டத் தட்டுகளினூடே உள்ள நியோடெதிஸ் பெருங்கடல் அடுக்கு எனப்படும் ஒரு பகுதியில் மிகவும் விரிவடைந்து வரும் ஒரு பிளவினை இது உருவாக்குகிறது.
  • சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பண்டையப் பெருங்கடலின் தளத்தை உருவாக்கிய இந்த அடுக்கு ஆனது, தென்கிழக்குத் துருக்கியிலிருந்து வடமேற்கு ஈரானை நோக்கிப் பிரிந்து நகர்கிறது.
  • எனவே தற்போது, ​​இந்த அடுக்கு பூமியின் மேலடுக்கில் கீழழுந்தி வருகிறது.
  • சிக்கலான இந்தச் செயல்முறையானது பல மில்லியன் ஆண்டுகள் நீடிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்