ஈராக்கிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மாமன்னர் அலெக்ஸாண்டரால் நிறுவப்பட்டதாக எண்ணப்படும் 2000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். வட ஈராக்கில் அமைந்துள்ள குவாலட்கா தார்பந் (Qalatga Darbandh) எனப்படும் பலப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் (Fortified Settlements) பெர்சிய மன்னன் மூன்றாம் டேரியஸீடன் மெசபடோமியாவில் நடைபெற்ற போருக்குப் பின் மாவீரர் அலெக்சாண்டரால் கி.பி. 331-ல் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.