ஈரான் நாடானது பின்வரும் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் பாலிஸ்டிக் வகை (கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும்) ஏவுகணைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
தியாகி குவாசிம் சுலைமானி – 1400 கிலோ மீட்டர் வரம்பு
தியாகி அபு மஹதி எனப்படும் புதிய கப்பல் வகை ஏவுகணை – 1000 கிலோ மீட்டர் வரம்பு
நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையானது ஈரானின் மிகவும் வலிமை பெற்ற இராணுவத் தளபதியான குவாசிம் சுலைமானி என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
புதிய கப்பல் வகை ஏவுகணையானது ஈராக்கின் போர்ப் படைத் தளபதியான முஜாஹிதீன் அபு மஹதி-அல் முகந்தீஸ் என்பவரின் நினைவால் பெயரிடப் பட்டு உள்ளது.
இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவினால் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டுள்ளனர்.