TNPSC Thervupettagam

ஈரானின் புதிய ஏவுகணைகள்

August 28 , 2020 1461 days 609 0
  • ஈரான் நாடானது பின்வரும் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் பாலிஸ்டிக் வகை (கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும்) ஏவுகணைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • தியாகி  குவாசிம் சுலைமானி – 1400 கிலோ மீட்டர் வரம்பு
    • தியாகி அபு மஹதி எனப்படும் புதிய கப்பல் வகை ஏவுகணை – 1000 கிலோ மீட்டர் வரம்பு
  • நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையானது ஈரானின் மிகவும் வலிமை பெற்ற இராணுவத் தளபதியான குவாசிம் சுலைமானி என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • புதிய கப்பல் வகை ஏவுகணையானது ஈராக்கின் போர்ப் படைத் தளபதியான முஜாஹிதீன் அபு மஹதி-அல் முகந்தீஸ் என்பவரின் நினைவால் பெயரிடப் பட்டு உள்ளது.
  • இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவினால் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்