ஈரான் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு கௌசார் என பெயரிடப்பட்டுள்ள தனது முதல் போர் விமானத்தை அதன் தலைநகரமான டெஹ்ரானில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் வெளியிட்டுள்ளது.
இது 100% ஈரான் நாட்டிலேயே ஈரானால் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வான் பயண மின்னணுவியல் மற்றும் பல்நோக்கு ரேடார் பொருத்தப்பட்டட நான்காம் தலைமுறை போர் விமானமாகும்.
இதன் பெயரான கௌசார் இஸ்லாமின் சொர்க்கத்தில் உள்ள ஆற்றினைக் குறிப்பதாகும். மேலும் இது குரானின் ஒரு அத்தியாயத்தின் தலைப்பாகும்.
கடந்த சில வருடங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல போர் விமானங்களை ஈரான் வெளியிட்டுள்ளது. 2013ம் ஆண்டு அமெரிக்காவின்
F-22 மற்றும் F-35 உடன் ஒப்பிடக்கூடிய ஹீவாஹர் – 313 என்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானத்தை ஈரான் வெளியிட்டது.