April 24 , 2019
2046 days
610
- ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது மீதான அதன் பொருளாதாரத் தடை விலக்குகள் புதுப்பிக்கப்பட மாட்டாது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
- இந்த தடை விலக்கு தள்ளுபடியானது ஈரான் நாட்டின் மீது அதிகபட்ச பொருளாதார அழுத்தத்தை உருவாக்கி அந்நாட்டினை தனிமைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.
- இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க கூட்டாளிகளான ஜப்பான், தென்கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இதனால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாகும்.
- சீனாவையடுத்து ஈரானிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இரண்டாவது நாடு இந்தியாவாகும்.
- தற்போது இந்தியாவானது கீழ்க்காணும் இரண்டிற்கும் அமெரிக்காவிடமிருந்து விலக்கு அளிக்கப்பட்ட அனுமதியைப் பெற வேண்டும்.
- எண்ணெய் இறக்குமதி
- சாபாஹார் துறைமுக மேம்பாடு
Post Views:
610