TNPSC Thervupettagam

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்

January 8 , 2020 1690 days 681 0
  • ஈரான் நாடானது JCPOA (விரிவான கூட்டு செயல் திட்டம் - Joint Comprehensive Plan of Action) அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளது.
  • அமெரிக்கத் துருப்புகள் அந்நாட்டுத் படைத் தலைவரான காசிம் சுலைமானியைக் கொன்ற பின்னர் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
  • ஈரான் மற்றும் பி5, ஜெர்மனி & ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்கு இடையே 2015 ஆம் ஆண்டில் விரிவான கூட்டு செயல் திட்டம் என அழைக்கப்படும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
  • பி5 என்பது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் (அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து) ஆகும்.
  • இந்த ஒப்பந்தமானது ஈரானின் அணுசக்தி திட்டத்தை தடை செய்கின்றது. அதற்குப் பதிலாக அந்நாட்டிற்கு எதிரான பெரும்பாலான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மீதான தாக்கங்கள்

  • தற்போது இந்தியாவின் மூன்றாவது பெரிய எண்ணெய் வள ஏற்றுமதியாளர் நாடாக (ஈராக் மற்றும் சவுதி அரேபியாவுக்குப் பிறகு) ஈரான் விளங்குகின்றது. மேலும் எண்ணெய் விலைகளில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் இந்தியாவில் பணவீக்க அளவையும் இந்திய ரூபாயையும் அது பாதிக்கும்.
  • இது சாபஹார் துறைமுகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்