TNPSC Thervupettagam

ஈரான் அணுசக்தி திட்டம்

April 20 , 2021 1225 days 590 0
  • ஈரான் தனது தேசிய அணுசக்தித் தொழில்நுட்பத் தினத்தை முன்னிட்டு அதன் நேட்டான்ஸ் அணுமின் உற்பத்தி நிலையத்தில் மேம்பட்ட அணுசக்தி மைய விலக்கிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
  • ஈரான் தனது யுரேனியம் விநியோகத்தை 60 சதவீத தூய்மைக்கு என்ற அளவில் செறிவூட்டத் தொடங்கியுள்ளது.
  • ஈரான் முதன்முறையாக இந்த நிலைக்கு வந்துள்ளது.
  • இது ஓர் ஆயுதம் தயாரிப்பதிற்குத் தேவையான மிக நெருக்கமான நிலையாகும்.
  • 2015 அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் கூட்டு அணுசக்தித் திட்டத்தின் கீழ், ஈரான் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவில் மட்டுமே யுரேனிய செறிவூட்டல் மைய விலக்குகளை பயன்படுத்த இயலும்.
  • இருப்பினும், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில், டொனால்ட் டிரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசானது இந்த ஒப்பந்தத்தை கைவிட்டு விட்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தது.
  • ஜோ பிடனின் தலைமையின் கீழான தற்போதைய அமெரிக்க அரசு இதைத் திரும்ப நீக்குவதாக உறுதியளித்துள்ளது.

மையவிலக்கி

  • இது ஓர் ஊடகத்தில் உள்ள துகள்களைப் பிரிக்கப் பயன்படுகிறது.
  • ஓர் அணு மையவிலக்கியில், யுரேனியம் 235 ஆனது யுரேனியம் 238 என்பதிலிருந்துப் பிரிக்கப் படுகிறது.
  • அணு உலையில் பயன்படுத்தப்படும் அணு எரிபொருளானது அதன் இயற்கையான செறிவூட்டலை விட, அதாவது யுரேனியம் 238 என்பதை விட யுரேனியம் 235 என்ற  ஐசோடோப்பின் செறிவு அதிகமாக இருக்க வேண்டும்.
  • யுரேனியம் 235 ஆனது யுரேனியம் 238 என்பதை விட அதிக கதிரியக்கம் கொண்டது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்