உயரடுக்கு இராணுவப் படையான ஈரானின் “இசுலாமிய புரட்சிப் பாதுகாப்புப் படை” (IRGC - Iran’s ‘Islamic Revolutionary Guard Corps) தீவிரவாத அமைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
முதன் முறையாக அமெரிக்க நாடானது பிற நாட்டின் இராணுவ அமைப்பை தீவிரவாத அமைப்பாக தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்குப் பதிலடி தரும் வகையில், ஈரான் அமெரிக்காவின் மத்திய படைப் பிரிவான மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
IRGC ஆனது 1979 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இசுலாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரான் மத குருவின் ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.
இது தற்பொழுது ஈரானின் வலிமை மிக்க பாதுகாப்பு அமைப்பாக உள்ளது.