ஜனவரி 15 ஆம் தேதி சபிர் என்ற செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் மூலம் "பயம்" என்று பெயரிடப்பட்ட செயற்கைக்கோளை ஈரான் ஏவியுள்ளது. ஆனால் புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சியின் நான்காவது நிலையில் இந்த செயற்கைக் கோள் தோல்வியடைந்தது.
ஈரானின் இந்த நடவடிக்கையானது ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் 2231-ஐ மீறி விட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
விண்வெளித் திட்டம் என்பது அணு ஆயுதப் போர் ஏவுகணைகளை வழங்கும் திறன் கொண்ட, அதிக தொலைவு சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வளர்ச்சிக்கான உள்ளடக்கம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன கூறியுள்ளது.
மேலும் ஈரான் மற்றொரு தாழ்மட்ட புவி சுற்றுவட்டப்பாதை செயற்கைக் கோளான தோஸ்தியை (நண்பர்) விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
ஈரானின் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக பயம் (பாரசீக மொழியில் தகவல் என்று பொருள்) மற்றும் தோஸ்தி ஆகிய இரு செயற்கைக் கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.