அறிவியலாளர்கள் முதல்முறையாக ஈர்ப்பு அலையின் பின்னணியினைக் கண்டறிந்து உள்ளனர்.
மெதுவாக ஒன்றிணைகின்ற மாபெரும் கருந்துளை இணைகளிலிருந்து வெளியாகும் ஈர்ப்பு அலைகளைக் குறைந்த அதிர்வெண் ஆற்றல் கொண்ட ஒரு பின்புலத்தினைப் பயன்படுத்திப் புவியிலிருந்துக் கண்டறியலாம்.
ஈர்ப்பு அலைகள் ஆனது நமது பேரண்டத்தில் உள்ள, பொதுவாக ஒன்றையொன்றுச் சுற்றி வருகின்ற சுற்றுப்பாதையில் உள்ள வானியல் ரீதியாக மிகவும் அடர்த்தியானப் பொருட்களால் உருவாக்கப் படுகின்றன.
2015 ஆம் ஆண்டில் லேசர் குறுக்கீட்டு அளவி ஈர்ப்பு-அலை ஆய்வகம் அல்லது LIGO மூலம் முதன்முதலாக இதனை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.