TNPSC Thervupettagam

உகாண்டாவின் முதல் எண்ணெய்க் கிணறுகள் துளைத்தல் திட்டம்

February 7 , 2023 660 days 309 0
  • உகாண்டா அரசானது, தனது முதல் எண்ணெய்க் கிணறுகள் துளைத்தல் பணியினைத் தொடங்கியது.
  • 2025 ஆம் ஆண்டில் முதல் முறையாக எண்ணெய் உற்பத்தி என்ற ஒரு இலக்கை அடைவதற்கான அந்நாட்டின் பாதையில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
  • இந்த எண்ணெய்க் கிணறு ஆனது, கிகுபே மாவட்டத்தில் உள்ள ஆல்பர்ட் ஏரிக்கு அருகில் சீனத் தேசியக் கடற்கரையோர எண்ணெய் உற்பத்தி நிறுவனம் (CNOOC) மூலம் இயக்கப் படுகிறது.
  • கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் வணிக ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேம்பாட்டுப் பணி தொடங்கப் பட்டுள்ளது.
  • உகாண்டாவின் எண்ணெய் இருப்புக்கள் 6.5 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வழங்கக் கூடியது என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதில் சுமார் 1.4 பில்லியன் பீப்பாய்கள் தோண்டியெடுக்கப் படக்கூடியவை என கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்