சமீபத்திய ஆண்டுகளில், உலகளாவியச் சுற்றுலாத் துறையானது துயரகர இடம் சார் சுற்றுலா / இருள் சுற்றுலாவின் எழுச்சியைக் கண்டுள்ளது.
இது வரலாற்று ரீதியான துயரமான அல்லது மோதல்கள் நடைபெற்ற இடங்களைப் பார்வையிடுவதில் கவனம் செலுத்தும் ஒரு முக்கிய பயணத் துறையாகும்.
தற்போது, உக்ரைன் இந்த வகையான சுற்றுலாவின் முக்கியத் தளமாக மாறியுள்ளது.
இந்தச் சுற்றுப்பயணங்கள் ஆனது, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படுகொலைகள் நடந்ததாகக் கூறப்படும் கியேவ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கான சுற்றுலாப் பயணங்களின் மீது கவனம் செலுத்துகின்றன.
குல்தாரா கிராமம் - ஜெய்சல்மர் (ராஜஸ்தான்), செல்லுலார் சிறை - போர்ட் பிளேயர் (அந்தமான் நிக்கோபார் தீவு), ரூப்குந்த் ஏரி - உத்தரகாண்ட் மற்றும் டுமாஸ் பீச் - சூரத் (குஜராத்) ஆகியவை இந்தியாவில் உள்ள சில துயரகர இடம் சார் சுற்றுலாத் தலங்கள் ஆகும்.