TNPSC Thervupettagam

உக்ரைனில் மேற்கு நைல் வைரஸ் பாதிப்பு

October 23 , 2024 30 days 96 0
  • உக்ரைன் நாட்டில் மேற்கு நைல் வைரசின் (WNV) பெருந்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • WNV வைரசானது ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள், வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியா போன்ற பகுதிகளில் பொதுவாகப் பரவுகின்ற வைரசாகும்.
  • இதன் பரவலானது மிகப் பொதுவாக ஜூன் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கு இடையேயான கோடை மற்றும் இலையுதிர் காலங்களில் அதிகமாக இருக்கும்.
  • இந்த வைரஸ் ஆனது, பொதுவாக வலசை போகும் பறவைகள் அல்லது குதிரைகளிடம் இருந்து பரவிய வைரசினால் பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.
  • இந்த வைரஸ் ஆனது, முதன்முதலில் உகாண்டாவின் மேற்கு நைல் பகுதியில் 1937 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
  • தற்போது WNV வைரசிற்குக் குறிப்பிட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ எதுவும் கண்டறியப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்