TNPSC Thervupettagam

உக்ரைனில் “பசுமை அறைகள்”

January 23 , 2024 307 days 246 0
  • உக்ரைனில் உள்ள ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது (UNDP), டென்மார்க் அரசாங்கத்துடன் இணைந்து, உக்ரைனில் இரண்டு “பசுமை அறைகளை” (சிறப்புத் தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட அறை) தொடங்கியுள்ளது.
  • “பசுமை அறை” என்பது, காவல்துறை அதிகாரிகள் மற்றும் போரில் தப்பிப்பிழைத்த குழந்தைகள் மற்றும் குற்றச் சாட்சியங்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில், சிறப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப் பட்ட இடத்தில் உள்ள செயல்பாடுகளின் தொகுப்பை உள்ளடக்கியுள்ளது.
  • விசாரணை மற்றும் செயல்முறை நடவடிக்கைகளின் போது குழந்தையின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கும் கொள்கைகளின் அடிப்படையில் இவை செயல்படுகின்றன.
  • "பசுமை அறை" ஆனது சிறப்புக் கண்ணாடியால் பிரிக்கப்பட்ட இரண்டு அறைகளைக் கொண்டுள்ளது.
  • ஒரு அறையில் குழந்தைகளுடனான தகவல் தொடர்பு கொள்ளவும், மற்றொன்று அந்த உரையாடல்களைக் கண்காணிக்கவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்