உக்ரைனில் உள்ள ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது (UNDP), டென்மார்க் அரசாங்கத்துடன் இணைந்து, உக்ரைனில் இரண்டு “பசுமை அறைகளை” (சிறப்புத் தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட அறை) தொடங்கியுள்ளது.
“பசுமை அறை” என்பது, காவல்துறை அதிகாரிகள் மற்றும் போரில் தப்பிப்பிழைத்த குழந்தைகள் மற்றும் குற்றச் சாட்சியங்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில், சிறப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப் பட்ட இடத்தில் உள்ள செயல்பாடுகளின் தொகுப்பை உள்ளடக்கியுள்ளது.
விசாரணை மற்றும் செயல்முறை நடவடிக்கைகளின் போது குழந்தையின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கும் கொள்கைகளின் அடிப்படையில் இவை செயல்படுகின்றன.
"பசுமை அறை" ஆனது சிறப்புக் கண்ணாடியால் பிரிக்கப்பட்ட இரண்டு அறைகளைக் கொண்டுள்ளது.
ஒரு அறையில் குழந்தைகளுடனான தகவல் தொடர்பு கொள்ளவும், மற்றொன்று அந்த உரையாடல்களைக் கண்காணிக்கவும் உதவுகிறது.