TNPSC Thervupettagam

உக்ரைன் போர் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பு

March 1 , 2023 509 days 255 0
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்களிக்கச் செய்வதிலிருந்து இந்தியா மீண்டும் விலகியுள்ளது.
  • 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, 141 உறுப்பினர் நாடுகள் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
  • 7 நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்த நிலையில், இந்தியா, சீனா, ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
  • ரஷ்யா, பெலாரஸ், வடகொரியா, எரித்திரியா, மாலி, நிகரகுவா மற்றும் சிரியா ஆகிய ஏழு நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
  • அமெரிக்காவுடனான இந்தியாவின் பாதுகாப்பு வர்த்தகம் சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  • ஆனால் இந்தியாவிற்குப் பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்