TNPSC Thervupettagam

உச்ச நீதி மன்றம் - முதல் பெண் வழக்கறிஞர்

April 28 , 2018 2404 days 1791 0
  • மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா இந்திய உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
  • இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • இதன் மூலம் வழக்கறிஞர் (பார்) அமைப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நீதிபதி இந்து மல்ஹேத்ரா ஆவார். இவருடைய நியமனம் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையானது  25-லிருந்து தலைமை நீதிபதி உட்பட  அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான 31 ஆக உயர்ந்துள்ளது.
  • ஒட்டுமொத்தமாக இந்து மல்ஹோத்ரா உச்ச நீதி மன்றத்தின் ஏழாவது பெண் நீதிபதியாவார்.
  • பாத்திமா பீவி உச்ச நீதி மன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆவார். இவர் 1989-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
  • இதுவரை நீதிபதி பானுமதி மட்டுமே உச்ச நீதிமன்றத்தின்  ஒரே  பெண் நீதிபதியாக இருந்து வந்தார்.
  • சுதந்திரத்திற்கு பின்னான 67 ஆண்டு கால வரலாறுடைய உச்சநீதிமன்றம், இது வரை இரு முறை மட்டுமே இரு பெண் நீதிபதிகளை ஒரே நேரத்தில் பணியமர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்