1950 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது தனது 75 ஆம் ஆண்டு நிறைவினை கொண்டாடுகிறது.
இந்தியா 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தை கொண்டிருந்தது.
மாகாணங்களுக்கு இடையிலான சில தகராறுகளைக் கையாளுதல் மற்றும் கீழமை நீதிமன்றங்களின் மேல்முறையீடுகளை விசாரித்தல் போன்ற செயல்பாடுகளை மேற் கொண்ட கூட்டாட்சி நீதிமன்றம் ஆனது 1937 முதல் 1950 ஆம் ஆண்டு வரை செயல் பட்டது.
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய வடிவம் நிறுவப்பட்டது.
இது இலண்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றம் மற்றும் மேலவையின் நீதித்துறை குழுவிற்கு மாற்றாக அமைந்தது.
அதன் முதல் அமர்வானது தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னதாக, பாராளுமன்றக் கட்டிடத்தில் உள்ள இளவரசர்களின் அறையில் நடைபெற்றது.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியன்று நடைபெற்ற அந்நீதிமன்றத்தின் முதல் அமர்வில் ஆறு நீதிபதிகள் பணியாற்றினர்.
பாராளுமன்றமானது 1950 ஆம் ஆண்டில் 8 ஆக இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 2019 ஆம் ஆண்டில் 34 ஆக உயர்த்தியது.