TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பதவிக்கான புதிய வழிகாட்டுதல்கள்

July 20 , 2023 368 days 209 0
  • உச்ச நீதிமன்றத்தில் வழக்காடுதல் பணியில் ஈடுபடும் மூத்த வழக்கறிஞர் பதவிக்கான புதிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
  • இந்த வழிகாட்டுதல் ஆனது, இந்திரா ஜெய்சிங் மற்றும் இந்திய அரசு ஆகிய ஒரு தரப்புகளுக்கிடையே நடைபெற்ற வழக்கில் (2017) வழங்கப்பட்ட தீர்ப்பின் விளைவாக, 2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சில வழிகாட்டுதல்களுக்கு மாற்றாக அறிவிக்கப் பட்டுள்ளன.
  • நீதிபதி S.K. கௌல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
  • இந்த வழக்கானது 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் வழங்கப்பட்ட ‘மூத்த வழக்கறிஞர்’ பதவிக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதில் மாற்றம் கோருகிறது.
  • தற்போதைய புதிய வழிகாட்டுதல்களில், ‘மூத்த வழக்கறிஞர்’ பதவிக்கு வேண்டி விண்ணப்பிப்பதற்கான குறைந்த பட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அதே சமயத்தில், இந்தியத் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்றத் நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு ஒரு வழக்கறிஞரின் பெயரைப் பரிந்துரைத்திருந்தால், இந்த வயது வரம்பைத் தளர்த்திக் கொள்ள இயலும்.
  • இருப்பினும், 2017 ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களிலும் அல்லது தற்போதைய உச்சநீதி மன்றத் தீர்ப்பிலும் குறைந்தபட்ச வயது எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.
  • 2017 ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களில், இந்தியத் தலைமை நீதிபதி அவர்கள் மற்ற “எந்தவொரு நீதிபதியுடன்” இணைந்து வழக்கறிஞரின் பெயரை இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது.
  • ஆனால் 2023 ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களில் இந்தியத் தலைமை நீதிபதி அவர்கள் “உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு நீதிபதியுடன்” சேர்ந்துப் பரிந்துரைக்கலாம் என்று குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்